சீனாவில் சேவை துறையின் மொத்த வர்த்தக தொகை அதிகரிப்பு
2022-12-01 19:12:40

சீன வணிக அமைச்சகம் டிசம்பர் முதல் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் சேவைத் துறையின் மொத்த வர்த்தகத் தொகை சுமார் 5 லட்சம் கோடி யுவானை எட்டி, தொடர்ச்சியான அதிகரிப்பை நிலைநிறுத்தியுள்ளது.

முதல் 10 மாதங்களில், சீனாவின் சேவைத் துறையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 4 லட்சத்து 91 ஆயிரத்து 855 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 17.2 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், அறிவாற்றல் அதிகம் கொண்ட சேவை வர்த்தகம் நிதானமான அதிகரிப்பு அடைந்து வருகிறது. சுற்றுலா சேவைக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்ச்சியாக மீட்சி அடைந்து வருகிறது. முதல் 10 மாதங்களில், இச்சேவைக்கான ஏற்றுமதி இறக்குமதித் தொகை 68 ஆயிரத்து 906 கோடி யுவானை எட்டி, 9.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.