நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையை மேம்படுத்தி வரும் சீனா
2022-12-01 18:56:34

சீனத் துணைத் தலைமை அமைச்சர் சுன் ட்சுன்லான் அம்மையார் டிசம்பர் முதல் நாள் தேசிய சுகாதார ஆணையத்தில் கருத்துரையாடல் கூட்டம் நடத்தி, நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான கருத்து மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.

நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு கொள்கையை முன்முயற்சியுடன் மேம்படுத்தி முழுமைப்படுத்துவது, சீனாவின் அனுபவங்களில் முக்கியமான ஒன்று. மூன்று ஆண்டுகால நோய் தொற்று தடுப்பில், சீனாவின் மருத்துவ சுகாதாரம் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாட்டு முறைமை சோதனையைத் தாக்குப்பிடித்துள்ளது. பயனுள்ள சிகிச்சை மற்றும் மருந்துகளைக் கொண்டுள்ள சீனாவில், 90 விழுக்காட்டுக்கு மேலானோர் தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தியுள்ளனர். பொது மக்களின் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு உயர்ந்துள்ள அதேவேளை, ஒமைக்ரொன் வைரஸின் நோய் உண்டாக்கும் திறன் குறைந்து வருகிறது. இது, நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளது. பொது மக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் உறுதி செய்யும் விதம் மேம்பட்ட நடவடிக்கைகளின் நடைமுறையாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.