நவம்பரில் யூரோ பகுதியின் பணவீக்கம் 10 சதவீதம்
2022-12-01 15:47:11

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவரப் பணியகம் 30ஆம் நாள் வெளியிட்ட முதற்கட்ட புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் திங்களில் யூரோ பகுதியின் பணவீக்க விகிதம் 10சதவீதமாக உயர்ந்துள்ளது. அக்டோபரில் இருந்ததை விட சிறிய அளவில் குறைந்துள்ளது.

மேலும், நவம்பரில் எரியாற்றல் விலை கடந்த ஆண்டில் இருந்ததை விட, 34.9 சதவீதம் அதிகரித்தது. இது பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகும். இதை தவிர, உணவு, மது மற்றும் புகையிலை பொருட்களின் விலை 13.6சதவீதம் அதிகரித்தது.