லாவோஸ் அரசுத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
2022-12-01 10:28:56

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 30ஆம் நாள் பெய்ஜிங்கில் லாவோஸ் அரசுத் தலைவர் தோங்லோன் சிசோலித்தை சந்தித்துப் பேசினார். அப்போது லீக்கெச்சியாங் கூறுகையில், சீனாவும் லாவோஸும் நட்பு அண்டை நாடுகளாகும். லாவோஸுடன் இணைந்து உயர் நிலை பரிமாற்றங்களை நிலைநிறுத்தி பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மைகளைப் படைக்க சீனா விரும்புகிறது என்றார்.

லாவோஸ்-சீன உறவிலும் ஒத்துழைப்பிலும் இடைவிடாமல் புதிய வளர்ச்சி அடைந்து வருகிறது. சீன தரப்புடன் இணைந்து லாவோஸ்-சீன இருப்புப் பாதையின் பங்களிப்பை மேலும் விரிவாக்க விரும்புவதாகவும் சீனத் தொழில் நிறுவனங்கள் லாவோஸில் முதலீடு செய்வதை வரவேற்பதாகவும் தோங்லோன் கூறினார்.