நிலையான சீன-ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பு
2022-12-01 18:51:02

ஐரோப்பாவுடனான உறவு வளர்ச்சியில் சீனா உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றது. இருதரப்புகளுக்கிடையில் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கும், உலக தொழில் சங்கிலியின் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கும், சர்வதேச பொருளாதார வர்த்தகக் கோட்பாட்டையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கும் சீனா பாடுபட்டு வருகின்றது. உயர் நிலையின் வழிகாட்டலில், இருதரப்புகளுக்கிடையில் வலிமை மிக்க பொருளாதார உறவு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் 10  திங்கள் காலத்தில் சீன-ஐரோப்பிய வர்த்தகத் தொகை 71140 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. சீனா, ஐரோப்பாவின் முதல் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். ஐரோப்பா சீனாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும் என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஷு யுடிங் டிசம்பர் முதல் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.