அமெரிக்காவில் வட்டி உயர்வு தொடரும்: ஜெரோம் பாவெல்
2022-12-01 15:24:27

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துவது இன்னும் சில காலத்துக்கு நீட்டிக்கும் என்று ஃபெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் ஜெரோம் பாவெல் 30ம் நாள் புதன்கிழமை தெரிவித்தார். ஆனால், வட்டி அதிகரிப்பின் அளவு, கூடிய விரைவில் டிசம்பரில் குறைக்கப்படக்கூடும் என்று அவர் கூறினார்.

உயர்வான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்க மத்திய வங்கி பலமுறை வட்டியை உயர்த்தியுள்ளது. ஜுன், ஜுலை, செப்டம்பர், நவம்பர் ஆகிய 4 மாதங்களில் முறையே 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தது.