அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 11 இலட்சம் பேர் சாவு
2022-12-01 16:59:44

அமெரிக்க மருத்துவக் கழக இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின் படி, 1990 முதல் 2021ஆம் ஆண்டு வரை, அமெரிக்காவில் 11 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். பாதிப்புக்குள்ளானவர்களில் 25.8 விழுக்காட்டினர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வேறுப்பட்ட குழுவினர்களிடையே துப்பாக்கி சண்டை தொடர்பான உயிரிழப்பு விகிதம் வேறுப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த இடைவெளி கடுமையாக அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.