ஜியாங் சேமின் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல்
2022-12-02 16:43:00

சீனாவின் முன்னாள் தலைவர் தோழர் ஜியாங் சேமின் மரணத்துக்கு, ரஷியா, லாவோஸ், கியூபா, புருணை, சிங்கபூர், மாலத் தீவு, கசகஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ், பாலஸ்தீனம், தான்சானியா, நிகரகுவா, வெனிசூலா, செக், ஜப்பான், பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன. அந்நாடுகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு இரங்கல் செய்தி அனுப்பினர்.

ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் கூறுகையில், சர்வதேச விவகாரங்களில் சீனா பங்கேற்க வேண்டும் என்பதில் ஜியாங் சேமின் உறுதியாக இருந்தார். சீனப் பொருளாதாரத்தின் பெரும் வளர்ச்சியை  முன்னேற்றிய அதேவேளையில், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்வதையும் அவர் தூண்டினார். அத்துடன், அவரது தலைமையில், ஐ.நாவின் 4வது உலக மகளிர் மாநாட்டைச் சீனா நடத்தியது. ஐ.நாவின் சார்பில், அவரது குடும்பத்தினருக்கும் சீன அரசு மற்றும் சீன மக்களுக்கும் மனமார்ந்த ஆறுதல் தெரிவிக்கிறேன் என்றார்.