சீனத் தலைமையமைச்சர் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சந்திப்பு
2022-12-02 16:52:43

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் டிசம்பர் 1ஆம் நாள் பெய்ஜிங்கில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிஷெலைச் சந்தித்தார்.

ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பது மற்றும் சமத்துவம் என்ற அடிப்படையில், ஒத்துழைப்பை விரிவாக்கவும், கருத்து வேறுபாடுகளை உரிய முறையில் கையாளவும், சீனா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படும்.

எரியாற்றல், தானியப் பாதுகாப்பு, உலகளாவிய தொழில் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை கூட்டாகப் பேணிகாக்கவும், சீனா-ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவான நெடுநோக்கு கூட்டாளியுறவின் சீரான மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.

ஒரே சீனா என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், சீனாவுடன் இணைந்து புதிய சுற்று ஐரோப்பிய ஒன்றிய-சீனத் தலைவர்களின் பேச்சுவார்த்தையை நடத்துவதை எதிர்பார்ப்தாக மிஷெல் தெரிவித்தார்.