சீன-லாவோஸ் மக்களுக்கு நன்மை தரும் இருப்புப்பாதை
2022-12-02 18:07:36

சீனா-லாவோஸ் இருப்புப்பாதை கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. தொடர்புடைய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு டிசம்பர் 2ஆம் நாள் வரை இந்த இருப்புப்பாதை மூலம் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் மேலாகும். அதோடு ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் எடை ஒரு கோடி டன்னைத் தாண்டியுள்ளது. இந்த இருப்புப்பாதை, இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிவதோடு, இருநாட்டு மக்களுக்கும் பெரும் நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.

சீனாவின் யுன்னான் மாநிலத்தை லாவோஸின் வியன்டியானுடன் இணைக்கும் இந்த இருப்புப்பாதை மொத்தம் 1035 கிலோமீட்டர் நீளமுடையது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்புக்கும், சீனா-லாவோஸ் இடையே ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புக்கும் முன்மாதிரி திட்டப்பணியாக இது உள்ளது.

சீன-லாவோஸ் இருப்புப்பாதையின் இயக்கத்துடன், சீனாவும் லாவோஸும் ஒத்துழைத்து, அதன் நெடுகிலுள்ள பகுதிகளை வளர்த்து வருகின்றன. வர்த்தகம், முதலீடு, உற்பத்தித் திறன் உள்ளிட்ட துறைகளில் மேலும் உயர்நிலை ஒத்துழைப்புகளை மேற்கொள்ளவும், இருப்புப்பாதையின் நெடுகிலுள்ள பிரதேசத்தின் பன்முக செழுமையை ஊக்குவிக்கவும் இருநாடுகள் செயல்பட்டு வருகின்றன.