ரஷியாவின் ஏற்றுமதி எண்ணெய் விலைக்கு மேலெல்லை:ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடு
2022-12-03 17:37:53

ரஷியாவின் ஏற்றுமதி எண்ணெய் விலையின் மீது பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலர் என்ற மேலெல்லையை ஐரோப்பிய ஒன்றியம் 2ஆம் நாள் நிர்ணயித்துள்ளது. அதன்படி, ரஷியா தனது எண்ணெய்யை பீபாய் ஒன்றுக்கு 60 டாலருக்கு மேல் விற்பனை செய்தால், ரஷிய எண்ணெயின் ஏற்றி இறக்கலுக்குக் காப்புறுதி மற்றும் நிதிச் சேவை செய்ய அனுமதியில்லை.

மேலும் கடந்த செப்டெம்பரில் 7 நாடுகள் குழு எட்டிய உடன்பாட்டின்படி, டிசம்பர் 5ஆம் நாள் முதல் ரஷியாவின் கட்சா எண்ணெய் மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் நாள் முதல் ரஷியாவின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் மீது விலைக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படத் தொடங்கும்.

இதனிடையில், ரஷிய எண்ணெயின் மீது விலைக் கட்டுப்பாடு மேற்கொள்ளும் நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் தொடர்பான உற்பத்திப் பொருட்களை வழங்க மாட்டாது என்று ரஷிய தரப்பு தெரிவித்துள்ளது.