சீன ஆவணப்பட விழா நடவடிக்கை
2022-12-03 18:21:26

டிசம்பர் 3ஆம் நாள் சீன ஊடகக் குழுமம், யூனெஸ்கோவுக்கான சீன நிரந்தர பிரதிநிதிக் குழுவுடன் இணைந்து, சீன ஆவணப்பட விழா பற்றிய நடவடிக்கையை நடத்தியது.

அதன் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூற்றை மேற்கோள்காட்டி, பல்வேறு நாகரிகங்களிலிருந்து நாம் அறிவுத்திறமையைத் தேடிப்பார்த்து நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு எழுச்சி ஆதரவையும் இதய ஆறுதலையும் வழங்கி, மனிதகுலம் கூட்டாக எதிர்கொள்ளும் பல்வேறு அறைகூவல்களைக் கைகோர்த்துக்கொண்டு தீர்க்க வேண்டும் என்று சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹை சியோங் கூறினார். பரஸ்பர நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவை உலக மக்களின் பொதுவான விருப்பமாகும். இதுவும் இந்த நடவடிக்கையை நடத்துவதற்கான சீன ஊடகக் குழுமத்தின் துவக்க நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.

மனிதர்கள் இயற்கையுடனான தங்கள் உறவை மீண்டும் மாற்றியமைக்கிறார்கள் என்பதை உலக முழுவதிலும் மனதை எட்டும் மாதிரிகள் நிரூபிக்கின்றன என்று யூனேஸ்கோவின் தலைவர் சாண்டியாகோ முரோ தெரிவித்தார். இந்த நடவடிக்கை 2022ஆம் ஆண்டின் இறுதி வரை தொடரும். 2023ஆம் ஆண்டில் உலகளாவிய புதிய சுற்று நடவடிக்கையைச் சீன ஊடகக் குழுமம் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.