குடிபெயர்வோர் பிரச்சினை குறித்து சீனக் கருத்து
2022-12-03 17:40:30

ஐ.நாவின் ஜெனிவா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள மற்ற சர்வதேச அமைப்புகளுக்கான, சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சேன் ஷூயு டிசம்பர் முதல் நாள், சர்வதேசக் குடிபெயர்தல் அமைப்பின் கூட்டத்தில் குடிபெயர்வோர் பிரச்சினை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.

கோவிட்-19 நோய் பரவல் ஊசலாடி வரும் நிலையில், தானியம், எரியாற்றல் உள்ளிட்ட துறைகளில் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இப்பின்னணியில் குடிபெயர்தல் மேலாண்மையும், சவால்களை எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச சமூகம், குடிபெயர்தல் அமைப்புக்கான அரசியல் ஆதரவு மற்றும் ஒத்துக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்க்கும் சர்வதேச மேலாண்மை முறைமையை மேம்படுத்தி, குடிபெயர்வோரின் சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்று ச்சேன் ஷூயு  இக்கூட்டத்தில் கூறினார்.