ஜியாங் சேமின் மறைவுக்கு ஐ.நா இரங்கல்
2022-12-03 17:17:10

நவம்பர் 30ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பவைக் கூட்டத்தில் சீனாவின் முன்னாள் தலைவர் தோழர் ஜியாங் சேமின் மரணத்துக்கு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதே நாள் ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் வெளியிட்ட அறிக்கையில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். ஜியாங் சேமினின் குடும்பத்தினர், சீன அரசு மற்றும் சீன மக்களுக்கு மனமார்ந்த ஆறுதல் தெரிவித்த குட்ரேஸ், அறிக்கையில் மேலும் கூறுகையில், சர்வதேச விவகாரங்களில் ஈடுபட, சீனாவுக்கு ஜியாங் சேமின் உறுதியாக வழிகாட்டினார். அவரது பதவி காலத்தில், சீனா, மாபெரும் பொருளாதார முன்னேற்றங்களைப் படைத்ததோடு, உலக வர்த்தக அமைப்பிலும் சேர்ந்தது என்று குறிப்பிட்டார்.