சீன விண்வெளி வீரர்களின் ஒப்படைப்புப் பணி
2022-12-03 17:16:21

சென் சோ 14 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், சென் சோ 15 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் ஆகியோர் டிசம்பர் 2ஆம் நாளிரவு ஒப்படைப்பு விழாவை நடத்தினர். இதில் அவர்கள் சீன விண்வெளி நிலையத்தின் சாவியை ஒப்படைத்தனர்.

சுற்றுவட்டப்பாதையில் இயங்கி வரும் சீன விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற முதலாவது  ஒப்படைப்பு விழா இதுவாகும். அதுடன் சீன விண்வெளி நிலையத்தில் வீரர்கள் நிரந்தரமாக தங்கியிருக்கும் முறையும் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. சென் சோ 14 விண்கலத்தின் விண்வெளி வீரர்கள், டிசம்பர் 4ஆம் நாள் சென் சோ விண்கலத்தின் மூலம் டோங்ஃபெங் தரையிறங்கும் தளத்திற்குத் திரும்புவார்கள்.