சீனாவில் உள்ள ஆசிய, ஆப்பிரிக்க தூதர்கள் சீன முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமினுக்கு இரங்கல் தெரிவித்தனர்
2022-12-03 17:12:14

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தூதாண்மை அதிகாரிகள்,  வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் வெளியுறவு அமைச்சகத்திற்குச் சென்று, முன்னாள் சீனத் தலைவர் ஜியாங் ஜெமினின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களில், கொரியா, வியட்நாம், பாகிஸ்தான், கம்போடியா, ஜப்பான், தென் கொரியா, எகிப்து, அல்ஜீரியா, நைஜீரியா, மொசாம்பிக், ருவாண்டா, மற்றும் பிற நாடுகளை சேர்ந்த தூதர்கள்,  ஜியாங் ஜெமினின் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.