சீனாவில் காட்சிப் பலகை உற்பத்தித் திறன் 20 கோடி சதுர மீட்டர்
2022-12-03 17:41:28

சீனாவில் நுண்மதி கைபேசி, தொலைக்காட்சி, காட்சித்திரை, கையடக்க கணினி, கணினி வரைப்பட்டிகை ஆகியவற்றின் தயாரிப்பில் தாளரமாகப் பயன்படுத்தப்படும் காட்சிப் பலகையின் உற்பத்தித் திறன் 20 கோடி சதுர மீட்டரை எட்டியுள்ளது.

முக்கிய உற்பத்தித் துறையின் தளவமைப்பைத் தொடர்ந்து சீராக்கி, சீனாவின் காட்சித் தொழிற்துறையை மேலும் தரமான நிலைக்கு முன்னேற்றிச் செல்லப் பாடுபடும் என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் துணை அமைச்சர் வாங் ச்சியாங்பிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சீன சிச்சுவான் மாநிலத்தில் நடைபெற்ற 2022 உலக காட்சித் தொழிற்துறை மாநாட்டில் சீன மின்னணு தகவல் தொழில் வளர்ச்சி ஆய்வகம், சீனாவின் புதிய ரக காட்சித் தொழிற்துறையின் வளர்ச்சி நிலைமை மற்றும் போக்கு பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதன்படி, சீனாவின் காட்சித் தொழிற்துறை சீராக வளர்ந்து வருகின்றது. 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, இத் துறையின் வருடாந்திர வளர்ச்சி 25.8 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.