ஐ.நா பொருள் சாரா கலாச்சார பாரம்பரியங்களின் பட்டியலில் 47 புதிய திட்டங்கள்
2022-12-04 17:57:22

பொருள் சாரா கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனேஸ்கோ 17ஆவது அரசாங்களுக்கிடை குழுக்கூட்டம் 3ஆம் நாள்  மொராக்கோவின் தலைநகர் பாலாத்தில் நிறைவடைந்தது. இக்கூட்டத்தில் மொத்த 47 திட்டங்கள் ஐ.நாவின்  ஐ.நா பொருள் சாரா கலாச்சார பாரம்பரியங்களின் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டன.

இவற்றில், துருக்கியின் பாரம்பரிய அஷ்லாத் கல் சிலைகள் உள்ளிட்ட 4 திட்டங்கள் மிக அவசரமாகப் பாதுகாக்க வேண்டிய பிரிவிலும், சீனாவின் பாரம்பரிய தேயிலை தயாரிப்புக் கலை நுட்பமும் அதன் தொடர்புடைய பழக்க வழக்கங்களும் உள்ளிட்ட 39 திட்டங்கள் மனிதகுல பொருள் சாரா கலாச்சார பாரம்பரியங்களின் பிரிவிலும், வேறு 4 திட்டங்கள் பொருள் சாரா கலாச்சார பாரம்பரியங்களின் செயற்பாட்டுப் பிரிவிலும் சேர்க்கப்பட்டன.

மேலும், இந்த 47 திட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி திட்டங்கள் இயற்கை மற்றும் பல்லூயிர் பாதுகாப்புடன் தொடர்புடையன. எவ்வாற்றானும்  சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முந்துரிமை அளிக்கும் சர்வதேசச் சமூகத்தின் மனவுறுதியை இது காட்டுகின்றது என்று யுனேஸ்கோ அமைப்பு அதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கூறுகின்றது.