பதவி ஏற்ற மலேசியாவின் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள்
2022-12-04 17:09:18

மலேசியாவின் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் டிசம்பர் 3ஆம் நாள் தலைநகரான கோலாலம்பூர் தேசிய அரண்மனையில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றனர். அந்நாட்டு உச்சத் தலைவர் அப்துல்லா மற்றும் பதவியேற்றுள்ள தலைமையமைச்சர் அன்வார் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

மலேசியத் தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, பொருளாதார வளர்ச்சியைப் புதிய அரசு முக்கியமாக முன்னேற்றவுள்ளது. அதோடு மக்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று 2ஆம் நாளிரவு அமைச்சரவை பட்டியலை அறிவித்த போது அன்வர் கூறினார்.