புகழ் பெற்ற சுற்றுலா தலம்—வூ ஃபாங் வட்டம்
2022-12-05 16:04:52

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் 2வது தொகுதி சுற்றுலா தலங்களின் பெயர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் செங் து மாநகரின் வூ ஃபாங் என்ற சிறு வட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வட்டம் 5 முக்கிய சாலைகளால் உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் சுற்றுலா துறையின் உயிராற்றலை முன்னெடுக்கும் வகையில், உள்ளூர் அரசு, மாரதான் போட்டி, திராட்சை பறித்தல் விழா, பொருள் சாரா மரபுச் செல்வங்களின் பண்பாட்டு விழா முதலியவை நடத்தியுள்ளன. பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்து வூ ஃபாங் வட்டத்துக்குச் சென்று வருகின்றனர்.