எண்ணெய் உற்பத்தி அளவு குறைப்பு
2022-12-05 16:52:51

ஒபெக் மற்றும் ஒபெக் அமைப்புச் சாராத பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் டிசம்பர் 4ஆம் நாள் காணொளி வழியில் 34வது அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தின. இதில் முன்பு நிர்ணயித்த எண்ணெய் உற்பத்தி குறைப்பு இலக்கை நிலைநிறுத்துவதென முடிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் உற்பத்தி அளவின் அடிப்படையில் இந்த ஆண்டு நவம்பர் முதல் மாதாந்திர உற்பத்தி அளவை ஒரு நாளைக்கு 20 இலட்சம் பீப்பாய் குறைக்க 33வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது உலக சராசரி தினசரி எண்ணெய் தேவையில் 2 விழுக்காட்டுக்கு சமமாகும்.

உலகச் சந்தையில் பொருளாதார வளர்ச்சி பற்றிய கவலைகள் காரணமாக, நியுயார்க் சந்தையில் பட்டு வாடா செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பீப்பாய்க்கு 120 டாலருக்கும் அதிகமாக இருந்து தற்போதைய பீப்பாய்க்கு சுமார் 80 டாலராகக் குறைந்துள்ளது.