சமமற்ற போட்டியை ஏற்படுத்தும் அமெரிக்காவின் பணவீக்க குறைப்பு சட்டம்
2022-12-05 10:28:48

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் அம்மையார் டிசம்பர் 4ஆம் நாள் புளூஜஸிலுள்ள ஐரோப்பிய கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்த்துகையில், ஐரோப்பா மற்றும் உலகின் இதர பிரதேசங்களில் அமெரிக்காவின் பணவீக்க குறைப்பு சட்டம் மீது அதிக கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனென்றால், இச்சட்டத்தின் விளைவாக, சமமற்ற போட்டி, சந்தை மூடல், உலக வினியோக சங்கிலி பிரிதல் ஆகியவை ஏற்படும் என்று குறிப்பிட்டார். மேலும், அமெரிக்காவுடன் அதிக விலையில் வர்த்தக சண்டையிடுவது, ஐரோப்பாவின் நலனுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் நலனுக்கும் பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.