ரஷியாவின் கச்சா எண்ணெய்க்கு விலை கட்டுப்பாடு
2022-12-05 09:21:28

கடல் வழியாக ரஷியா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் விலைக் கட்டுப்பாடு  டிசம்பர் 5ஆம் நாள் முதல்  நடைமுறைக்கு வந்தது. ஜி7 நாடுகளும் ஆஸ்திரேலியாவும் அதே நாளில் இந்த விலைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த உள்ளன.

கடல் வழியாக ரஷியா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 60 டாலர் என்ற விலைக் கட்டுப்பாட்டை  ஜி7 நாடுகளும் ஆஸ்திரேலியாவும் 2ஆம் நாள் தீர்மானித்தன. அதே நாளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தகைய முடிவை எடுத்தன.

விலை கட்டுப்பாட்டை மேற்கொண்ட நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் உற்பத்தி பொருட்களை வினியோகிக்க மாட்டோம் என்று  ரஷியா முன்னதாக தெரிவித்துள்ளது.