சீனாவின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிப்பு
2022-12-07 16:40:16

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் 7ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவில் சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த மதிப்பு 38 ஆயிரத்து 34 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 8.6 விழுக்காடு அதிகமாகும்.

ஆசியான், சீனாவின் மிக பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும். இது சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தகத்தில் 15.4 விழுக்காட்டை வகிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடன் சீனாவின் வர்த்தகத் தொடர்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.