சீனாவின் ASO-S செயற்கைக் கோள் எடுத்த அறிவியல் படங்கள் வெளியீடு
2022-12-13 14:58:14

சூரிய ஆய்வுக்கான சீனாவின் ASO-S என்னும் பன்நோக்க செயற்கைக் கோள் எடுத்த முதல் தொகுதி அறிவியல் படங்களைச் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தேசிய விண்வெளி அறிவியல் மையம் டிசம்பர் 13ஆம் நாள் வெளியிட்டது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் நாள் இந்தச் செயற்கைக் கோள் ஏவப்பட்டதற்கு பிறகு 2 மாதங்களில் எடுத்த அறிவியல் கண்காணிப்புப் படங்கள் இவை ஆகும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல புதிய சாதனைகளை இது பெற்றுள்ளது.

அடுத்த கட்டத்தில், ASO-S செயற்கைக் கோள் திட்டத்தின்படி பாதையிலுள்ள சோதனைகளைத் தொடர்ந்து நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.