சீனாவில் உள்நாட்டுத் தேவையை விரிவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
2022-12-15 11:02:18

2022ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டு வரை, உள்நாட்டு தேவையை விரிவுபடுத்துவதற்கான நெடுநோக்கு இலக்குகளைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் அரசவையும் அண்மையில் வெளியிட்டன.

சோஷலிச நவீன நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் நெடுநோக்குத் திட்டத்தின்படி, 2035ஆம் ஆண்டுக்குள் சீனாவில் நுகர்வு மற்றும் முதலீட்டு அளவு மேலும் விரிவாக்கப்படும். உள்நாட்டுத் தேவையுடன் தொடர்பான ஒரு முழுமையான அமைப்புமுறை பன்முகங்களிலும் உருவாக்கப்படும். புதிய தொழிற்துறை மயமாக்கம், தகவல் மயமாக்கம், நகர மயமாக்கம், வேளாண் துறையின் நவீனமயமாக்கம் ஆகியவை நனவாக்கப்படும். நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்களின் வருமானம் தெளிவாக அதிகரிக்கப்படும். அதேவேளையில், நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளியும் மக்களுக்கிடையிலான வாழ்க்கை தர இடைவெளியும் பெரிதும் குறைக்கப்படும். மக்கள் அனைவரும் கூட்டுச் செழுமை அடையும் முயற்சியில் பெரும் முன்னேற்றம் காணப்பட வேண்டும். உள்நாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து சீர்திருத்தம் மேற்கொண்டு ஆதரவுப் பயன் தர வேண்டும். உயர் தரமான சந்தை அமைப்புமுறை மேலும் மேம்பட்டு வரும். அதேவேளையில், புதிய புழக்க அமைப்புமுறை முழுமையாகக் கட்டிமுடிக்கப்படும். உலகப் பொருளாதார ஒத்துழைப்பில் சீனா தொடர்ந்து பங்கெடுத்து, மேலதிக போட்டியாற்றலையும் மேம்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டும். உலகளவில் சீனச் சந்தையின் செல்வாக்கு அதிகமாக வளர்ந்து வரும்.