தொலைதூரப் பகுதிகளுக்கு உதவியளிக்கும் சீனாவின் நிதியுதவி திட்டம் நேபாளத்தில் தொடங்கியது
2022-12-17 17:18:48

தொலைதூரப் பகுதிகளுக்கு சுகாதாரப் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைகளை வழங்கும் சீனாவின் நிதியுதவி திட்டம், நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள லலித்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.  

சீனாவின் உலகளாவிய வளர்ச்சி மற்றும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு நிதியத்தின் மூலம் இந்த திட்டத்திற்கு நிதியளிக்கப்பட்டது. "சிரிக்கும் குழந்தைகள்" திட்டத்தின் கீழ் உணவுப் பொட்டல விநியோகத் திட்டத்திற்குப் பிறகு, ஒத்துழைப்பு நிதியத்தின் மூலம் சீன அரசாங்கத்தால் நேபாளத்திற்கு நிதியளிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இப்புதிய திட்டத்தின் மூலம், சுகாதாரம், தொற்றுநோய் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நேபாளத்தின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் சமூகங்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள் வழங்கப்படுகின்றது.

நேபாளத்தில் உள்ள ஊரக வளர்ச்சிக்கான சீன அறக்கட்டளை கடந்த ஏழு ஆண்டுகளில், நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய உந்துதலில் பெரிதும் ஈடுபட்டு, நேபாளத்தில் உள்ள 77 மாவட்டங்களில் 57 இல் 15 திட்டங்களைச் செயல்படுத்தி, 550,000க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களுக்கு பயனளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.