3 ஆண்டுக்கால நோய் தடுப்பில் ஊன்றி நிற்கும் சீனா
2022-12-19 14:59:22

இறுதியில் பல மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்படக் கூடும். ஏன், சீனா, கடந்த 3 ஆண்டுகளில் நோய் பரவலைச் சமாளிக்க மிக கண்டிப்பான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என்று பலர் கேட்டுள்ளனர். மக்களின் ஆரோக்கியத்துக்கு இயன்றளவில் உத்தரவாதம் அளிப்பது, இதற்கான விடையாகும்.

கடந்த 3 ஆண்டுகளில் கரோனா வைரஸ், அல்ஃபா, டெல்டா, ஒமிக்ரொன் முதலிய திரிபுகளாக மாறி, தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விளைவித்து வருகிறது. 2019ஆம் ஆண்டு தொடங்கி, அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். நோய் பரவல் சங்கிலியை விரைவாகத் துண்டிப்பது சிக்கலாக உள்ளது. தற்போது ஒமிக்ரொனின் பாதிப்பு முன்பை விட குறைந்தது. பயனுள்ள மருந்துகள் சீனா ஆய்வு செய்து பெருமளவில் தயாரித்துள்ளது. மக்களிடம் 345 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடும் முயற்சி மூலம் கிடைத்த இந்த மதிப்புள்ள வாய்ப்புகள் தான், பொது மக்கள், குறிப்பாக முதியோர் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தைப் பாதுகாத்து வருகிறது.

மேலை நாடுகளுடன் வேறுபட்ட நோய் தடுப்புப் பாதையை சீனா தொடக்கத்திலே தேர்வு செய்தது. சீனா, மக்களின் உயிரைப் பதில் விலையாகக் கொண்டு செயல்படாது. கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்பான முடிவு எடுப்பதற்கு, ஆழ்ந்த யோசனை மற்றும் மனவுறுதி தேவை. “மக்கள் முதன்மை”என்பது, சீனாவின் முடிவுக்கான ஆதாரம்.