வெளிநாட்டு சந்தையில் வாய்ப்பை தேடி வரும் சீன நிறுவனங்கள்
2022-12-21 15:45:08

கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தளர்த்துவதாக சீனா அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தையில் ஒத்துழைப்பு வாய்ப்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையில், குவாங்டொங், சேஜியாங், ஜியாங்சு உள்ளிட்ட 9 மாநிலங்களின் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. சேஜியாங் மாநிலத்தின் நிங்போ நகரில் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் இத்தாலி, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறை குழுவை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவுகளின் ஒப்பந்தத் தொகை சுமார் 200 கோடி அமெரிக்க டாலராக இருக்கும். டிசம்பர் 5ஆம் நாள் சிச்சுவான் மாநிலத்தில் உணவு, மருந்து, வாகனம் மற்றும் வேளாண் பொருட்கள் துறைகளைச் சேர்ந்த 31 வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொருளாதார மற்றும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 9 நாள் பயணமாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலிக்குச் சென்றனர்.