புதிய பதிவாகியுள்ள டா சிங் எண்ணெய் வயல் உற்பத்தி அளவு
2022-12-22 16:14:03

புதிதாக கிடைத்த தகவலின்படி, சீனாவின் டா சிங் எண்ணெய் வயலில் 3ஆவது நிலை எண்ணெய் அகழ்வு அளவு மீண்டும் ஒரு கோடி டன்னைத் தாண்டி, முதல் 11 மாதங்களில் அதன் எண்ணெய் உற்பத்தி அளவு 1 கோடியே 2 லட்சத்து 64 ஆயிரத்து 400 டன்னை எட்டி, வரலாற்றில் புதிய பதிவாகியுள்ளது. டா சிங் எண்ணெய் வயலில் 3ஆவது நிலை எண்ணெய் அகழ்வு அளவு தொடர்ந்து 21 ஆண்டுகள் ஒரு கோடி டன்னைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் வள அகழ்வு கடினமாகி வருவதுடன், 3ஆவது நிலை எண்ணெய் அகழ்வு தொழில் நுட்பம், பழயை எண்ணெய் வயலின் கச்சா எண்ணெய் அகழ்வு விகிதத்தை அதிகரிக்கும் முக்கிய தொழில் நுட்பமாகும். தற்போது டா சிங் எண்ணெய் வயலின் 3ஆவது நிலை எண்ணெய் அகழ்வு தொழில் நுட்பம் உலகின் முன்னணியில் இருந்து, அதன் உயர்தர மற்றும் நிலையான உற்பத்திக்கு ஆதரவாக அமைந்துள்ளது.