அமெரிக்க 2023 நிதியாண்டு தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்துக்குச் சீனா எதிர்ப்பு
2022-12-24 16:07:21

அமெரிக்காவின் 2023 நிதியாண்டு தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் டிசம்பர் 24ஆம் நாள் அந்நாட்டு அரசுத் தலைவர் பைடன் கையெழுத்திட்டார். இச்சட்டத்தில் சீனா தொடர்பான ஏராளமான எதிர்மறை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்குக் கடுமையான மனநிறைவின்மையையும் உறுதியான எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் உள் விவகாரத்தில் இச்சட்டம் தலையிட்டுள்ளதுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பழிவாங்கி, சீனாவுக்கு எதிரான கடுமையான அரசியல் ஆத்திரமூட்டல் செயலாகவும் இது அமைந்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையானது வரலாறு மற்றும் மக்களின் தேர்வாகும் என்று சீனத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது.

ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் சீன-அமெரிக்காவின் மூன்று கூட்டறிக்கைகளையும் இச்சட்டம் கடுமையாக மீறியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  தைவான் நீரிணை இரு கரை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்துக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கின்றது. தைவான், சீனாவின் தைவானாகும். சீனாவின் உள் விவகாரங்களில் வெளிப்புற சக்திகளின் தலையீட்டுக்கு ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.

பாலி தீவில் நடைபெற்ற இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டிய முக்கியமான ஒத்த கருத்தைச் செயல்படுத்துமாறு அமெரிக்காவுக்கு சீனா வேண்டுகோள் விடுக்கின்றது. வலுவான நடவடிக்கைகளைச் சீனா மேற்கொண்டு, நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு மேம்பாட்டு நலன்களை உறுதியாகப் பேணிக்காக்கும்.