நியூயார்க்கில் அவசர நிலை அறிவிப்பு
2022-12-27 17:07:24

இயற்கைப் பேரிடர் காரணமாக, நியூயார்க் மாநிலத்தில் அவசர நிலையை அமல்படுத்துவதற்கு அந்நாட்டு அரசுத் தலைவர் பைடன் டிசம்பர் 26ஆம் நாள் அனுமதியளித்தார். பனி புயல் சீற்றத்தைத் தடுப்பதற்குக் கூட்டாட்சி அரசு உதவி அளிக்க வேண்டும். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், கூட்டாட்சி அவசர விவகார நிர்வாகப் பணியகம் ஆகியவை மீட்புப் பணிக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நியூயார்க் மாநிலத்தின் மேற்குப் பகுதி, கடும் பனி புயலால் பாதிப்படைந்துள்ளது. சில இடங்களில் பனிப் பொழிவு சுமார் 109 சென்டி மீட்டரை எட்டியுள்ளது.

அமெரிக்க வானொலி நிலையம் டிசம்பர் 26ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, இப்புயலில் நியூயார்க், இல்லினாய்ஸ, கொலொராடொ உள்ளிட்ட 12 மாநிலங்களில் குறைந்தது 57 பேர் உயிரிழந்தனர்.