நேபாளத்தில் பொக்காரா சர்வதேச விமான நிலையம் இயக்கம்
2023-01-02 16:25:08

நேபாளத்தின் பொக்காரா சர்வதேச விமான நிலையம் ஜனவரி முதல் நாள் அன்று பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்ட்டது. அந்நாட்டுத் தலைமை அமைச்சர் பிரசந்தா  அதன் தொடக்க விழாவில் உரைநிகழ்த்துகையில், புதிய விமான நிலையம் இயங்குவதுடன், நேபாளம் பல நாடுகளை இணைப்பதற்கான மையமாக பொக்காரா மாறும் என்று தெரிவித்தார்.

இந்த சர்வதேச விமான நிலையம், சீன தொழில் நிறுவனத்தால் கட்டியமைக்கப்பட்டது. அதன் கட்டுமானப் பணி 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்டது. 4 ஆண்டுக்காலம் கட்டுமானப் பணி நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டது. கோவிட்-19 பரவல் பாதிப்பினால்,  ஓராண்டுக்காலம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.