பல்வேறு நாடுகளில் பரவி வருகின்ற XBB.1.5 திரிபு
2023-01-05 15:21:17

உலகச் சுகாதார அமைப்பின் அதிகாரி மரியா வான் கெர்கோவ் ஜனவரி 4ஆம் நாள் கூறுகையில், இதுவரை, 29 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கரோனா வைரஸின் XBB.1.5 புதிய திரிபு கண்டறியப்பட்டது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் மேலும் அதிகமான கரோனா அலை ஏற்படும். ஆனால் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இது அதிகமான உயிரிழப்பு ஏற்படுவது உறுதி என்று சொல்ல முடியாது என்றார்.

ஐ.நாவின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2022ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் XBB.1.5 திரிபு முதல்முறையாகக் கண்டறியப்பட்டது. தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இது தீவிரமாகப் பரவி வருகிறது.