சீனாவில் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை அதிகரிப்பு
2023-01-07 16:38:06

சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் ஜனவரி 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு டிசம்பர் இறுதி வரை, சீனாவில் அந்நிய செலாவணி கையிருப்பு தொகை 3 லட்சத்து 12 ஆயிரத்து 770 கோடி அமெரிக்க டாலரை எட்டி, நவம்பர் இறுதியில் இருந்ததை விட 1020 கோடி அமெரிக்க டாலர் அதாவது 0.33 விழுக்காடு அதிகரித்துள்ளது.