சீன-அமெரிக்க உறவை அமெரிக்கா சரியாக பார்க்க வேண்டும்
2023-01-11 17:33:23

சீனாவிலிருந்து வரும் அறைகூவல்களைச் சமாளிக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றம் சிறப்பு ஆணையம் ஒன்றை அமைக்க உள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 11ஆம் நாள் கூறுகையில்,

தொடர்புடைய அமெரிக்கர்கள், சீனாவையும் சீன-அமெரிக்க உறவையும் நேர்மையாகவும் சரியாகவும் கருத வேண்டும். அமெரிக்க சொந்த நாடு மற்றும் இரு நாடுகளின் கூட்டு நலன்களைக் கருத்தில் கொண்டு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு, சமாதான சக வாழ்வு மற்றும் கூட்டு வெற்றி பெறக் கூடிய சீன-அமெரிக்க உறவை முன்னேற்ற வேண்டும் என்றார்.