திபெத்தில் மேம்படுத்தப்பட்ட உயிரினச் சுற்றுச்சூழல்
2023-01-13 17:13:47

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் வெளியிட்ட தகவலின்படி, 2022ஆம் ஆண்டு, திபெத்தில் காடு வளர்ப்பின் பரப்பு 78 ஆயிரம் 600 ஹெக்டராகும். சீரமைக்கப்பட்ட புல்வெளியின் நிலப்பரப்பு சுமார் 2 லட்சத்து 91 ஆயிரத்து 666 ஹெக்டராகும். மேலும், முழு திபெத்திலும் காற்று தரம் 99 விழுக்காட்டுக்கும் மேலான நாட்களில் சிறந்த நிலையை எட்டியுள்ளது. உயிரினச் சுற்றுச்சூழல் தெளிவாக மேம்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், உயிரினப் பாதுகாப்புக்கு திபெத் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இப்பிரதேசத்தின் 50 விழுக்காடான நிலப்பரப்பு உயிரினப் பாதுகாப்புப் பகுதியாக அமைக்கப்பட்டது. புல்வெளியில் தாவர நிலப்பரப்பும், காடு வளர்ப்பு விகிதமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாலைவனமயமாக்கம் மற்றும் மணற்பாங்கான நிலப்பரப்பு குறைந்துள்ளது. விவசாயிகள் மற்றும் ஆயர்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதேவேளையில் இதிலிருந்து நலன் பெற்றும் வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு உயிரினச் சுற்றுச்சூழல் மேலாண்மையை திபெத் தொடர்ந்து வலுப்படுத்தும்.