நேபாள-சீனாவின் பாரம்பரிய நட்புறவு
2023-01-14 17:23:40

காத்மாண்டுவில் உள்ள அரசுத் தலைவர் மாளிகையில் நேபாளத்திற்கான சீனாவின் புதிய தூதர் சென் சாங் சமார்ப்பித்த அதிகாரப் பத்திரத்தை 13ஆம் நாள் நேபாள அரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி அம்மையார் ஏற்றுக்கொண்டார். நேபாளமும் சீனாவும் பாரம்பரிய நட்பு அண்டை நாடுகளாகும். பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புச் சாதனைகளை இரு நாடுகள் பெற்றுள்ளன. நீண்டகாலமாக நேபாளத்துக்கு அளித்த ஆதரவிற்கும் உதவிகளுக்கும் சீன அரசுக்கும் மக்களுக்கும் நேபாளம் நன்றி தெரிவிக்கிறது. சீனாவுடன் இணைந்து, பிரதேசங்களின் அமைதியையும் நிதானத்தையும் கூட்டாகப் பேணிகாத்து, பிரதேசங்களின் செழுமையையும் வளர்ச்சியையும் மேம்படுத்தி, மனித குலத்துக்கான பொது எதிர்காலத்தை முன்னேற்ற வேண்டும் என்று நேபாளம் விருப்பம் தெரிவிப்பதாக பண்டாரி அம்மையார் கூறினார்.