புத்தாண்டு வழங்கும் வசந்த விழா இரவு கலை நிகழ்ச்சி
2023-01-16 15:49:54

சீன ஊடகக் குழுமம் நடத்தும் 2023ஆம் ஆண்டு வசந்த விழா இரவு கலை நிகழ்ச்சிக்கான செய்தியாளர் கூட்டம் ஜனவரி 16ஆம் நாள் நடைபெற்றது. பல்வகை புதிய தொழில் நுட்பங்களின் பயன்பாடு, நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இந்நிகழ்ச்சியின் அரங்கு அலங்காரங்கள் பற்றிய காணொளி, மங்களமான சின்னங்கள் பற்றிய காணொளி ஆகியவை இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

2023ஆம் ஆண்டு வசந்த விழா இரவு கலை நிகழ்ச்சி பெய்ஜிங் நேரப்படி ஜனவரி 21ஆம் நாளிரவு 8 மணிக்கு சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த பல அலைவரிசைகளின் வழியாக ஒளிப்பரப்பப்படும். மேலும், 170க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 700க்கும் மேலான ஊடகங்களில் இந்நிகழ்ச்சி 68 மொழிகளில் ஒளிப்பரப்புப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.