உலகப் பொருளாதாரம் துண்டு துண்டாக வளர்வதில் ஏற்பட்ட பாதிப்பு
2023-01-16 10:23:46

உலகப் பொருளாதார ஒருமைப்பாடு பல பத்து ஆண்டுகளுக்குப் பின், தற்போது துண்டாகியுள்ள நிலையில் உலகப் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி மிதப்பு 7விழுக்காடு வரை குறைய நேரிடும் என்று சர்வதேச நாணய நிதியம் ஜெனவரி 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பல ஆண்டுகளாக ஆழமாக வளர்ந்து வரும்வர்த்தக உறவினால், உலக முழுவதும் வறிய மக்களின் தொகை பெரிதும் குறைந்து வருகிறது. விலைவாசியின் குறைவினால், வளர்ந்த நாடுகளில் குறைவான வருமானமுடைய நுகர்வோர் நன்மை பெற்றுள்ளனர். ஆனால், வர்த்தக உறவு பிரிதல், குறைந்த வருமானமுடைய நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளிலுள்ள நடு மற்றும் குறைந்த வருமானமுடைய நுகரவோர்களுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு முடிவுக்கு இணங்க, துண்டு தம்உடாக வளரும் போக்கு தீவிரமாகினால், உற்பத்திச் செலவு மேலும் அதிகரிக்கும். தொழில் நுட்பம் ரீதியான துண்டிப்பு, வர்த்தக தடையால் ஏற்படுத்தும் பாதிப்பை பெருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.