இலங்கை வளர்ச்சிக்கு உதவி வரும் சீனா
2023-01-16 18:51:16

ஜனவரி 16ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இலங்கையின் கடன் பிரச்சினை மற்றும் இன்னல்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அவை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், சீனாவுடனான கடன் பிரச்சினையை, குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் இலங்கையுடன் கலந்தாய்வு செய்து உரிய முறையில் தீர்ப்பதற்கு சீனா ஆதரவளிக்கிறது. தொடர்புடைய நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, இலங்கையின் இன்னல்களைச் சமாளித்து, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதற்குப் பங்காற்ற விரும்புகிறோம். இலங்கை அரசு, சொந்த முயற்சி மூலம், அன்னிய கூட்டாளிகளின் உரிமையையும், உள்நாட்டின் முதலீட்டுச் சூழலையும், செல்வாக்கையும் பேணிக்காக்க முடியும் என்று நம்புகிறோம் என்றார்.