உலகப் பொருளாதார மன்றத்தின் 2023ஆம் ஆண்டுக்கூட்டம் துவக்கம்
2023-01-17 11:07:03

உலகப் பொருளாதார மன்றத்தின் 2023ஆம் ஆண்டுக்கூட்டம் ஜனவரி 16ஆம் நாள் ஸ்விட்சர்லாந்தின் தாவோஸில் துவங்கியது.

அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், வணிகத் துறைத் தலைவர்கள், நிபுணர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட 130 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2700க்கும் மேலான பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கெடுக்கின்றனர்.

எரியாற்றல் மற்றும் தானிய நெருக்கடி, பண வீக்கம் மற்றும் அதிகக் கடன், தொழில் துறையின் மந்த நிலை, சமூகத்தின் பலவீனம், புவியமைவு அரசியல் இடர்ப்பாடு ஆகிய 5 பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, நடப்பு மன்றக்கூட்டத்தின் முக்கிய அம்சமாகும்.