மூத்த தோழர்களுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2023-01-19 16:31:53

வசந்த விழாவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள், தொலைப்பேசி மூலம் மூத்த தோழர்களுக்கு மனமார்ந்த வணக்கத்தையும், நீண்ட ஆயுளைப் பெறவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாழ்த்து பெற்ற மூத்த தோழர்கள், தலைவர்களிடம் நன்றி தெரிவித்தனர். கட்சி, ராணுவம் மற்றும் பல்வேறு இன மக்கள் அனைவரும், ஷிச்சின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியை மையமாகக் கொண்டு, மேலும் நெருக்கமாக ஒன்றுபட வேண்டும். சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நிறைவேற்றுவதற்கு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று மூத்த தோழர்கள் விருப்பம் தெரிவித்தனர்.