ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துகள்
2023-01-19 11:37:15

வசந்த விழா வரவுள்ள நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் ஜனவரி 18ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் காணொளி வழியாக, ஹெய்லோங்ஜியாங், ஃபூஜியன், சின்ஜியாங், ஹேநான், பெய்ஜிங், சிச்சுவான் உள்ளிட்ட இடங்களிலுள்ள அடிமட்ட ஊழியர்கள் மற்றும் பொது மக்களுடன் தொடர்பு கொண்டார். அப்போது, நோய் தொற்று தடுப்புக்கான முன்கள மருத்துவப் பணியாளர்கள், எரியாற்றல் வினியோக நிறுவனங்களின் பணியாளர்கள், விவசாயப் பொருட்கள் சந்தையிலுள்ள வணிகர்கள், கிராமப்புற ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோருக்கு அவர் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய் தொற்று தடுப்பு மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சை பணியில் ஷி ச்சின்பிங் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். இது பற்றி அவர் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்நோய்க்கு எதிராக சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானவை. இந்நடவடிக்கை சரிப்படுத்தப்பட்ட நிலையில் விடா முயற்சியுடன் வெற்றி பெறுவது உறுதி. பல்வேறு நிலை கட்சிக் குழு மற்றும் அரசுகள் பொது மக்களின் மருத்துவத் தேவையையும் கிராமப்புறங்களில் நோய் தொற்றுத் தடுப்புக்கான தேவையையும் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அனைவரும் நம்பிக்கையுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு, புத்தாண்டில் மேலும் பெரும் சாதனைகளைப் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்ததோடு, பல்வேறு தேசிய இன மக்கள், ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் மக்கள், வெளிநாடுகளிலுள்ள சீனர்கள் ஆகியோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.