பசுமை எரியாற்றல் நுட்ப வளர்ச்சிக்கான முக்கிய உந்து ஆற்றல் சீனா:IEA தலைவர்
2023-01-21 16:46:35

சீனா, பசுமை சார் எரியாற்றல் நுட்பத்தின் வளர்ச்சிக்கான முக்கிய உந்து ஆற்றல் என்று சர்வதேச எரியாற்றல் நிறுவனத் தலைவர் ஃபாத்திஹ் பிரோல் தெரிவித்தார். உலகப் பொருளாதார கருத்தரங்கின் ஆண்டு கூட்டத்தின் போது, சின்குவா செய்தி நிறுவனத்துக்கு அளித்த போட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், மின்சார வாகனம் முதலிய துறைகளில் சீனா உலக முன்னணியில் உள்ளது என்றார்.

2022முதல் 2027ஆம் ஆண்டு வரை, உலகின் புதிதாக அதிகரிக்கும் புதுப்பிக்கவல்ல எரியாற்றலில் சீனா பாதியளவு வகிக்கும் என்று கடந்த டிசம்பரில் சர்வதேச எரியாற்றல் நிறுவனம் வெளியிட்ட புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.