2023 வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியில் புதிய தொழில்நுட்ப பயன்பாடு
2023-01-21 16:34:13

சீன ஊடகக் குழுமத்தின் 2023ஆம் ஆண்டு வசந்த விழா சிறப்பு கலை நிகழ்ச்சி இன்றிரவு(ஜனவரி 21ஆம் நாள்) நடைபெறவுள்ளது. அதற்கான நிகழ்ச்சிப் பட்டியல் 20ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இன்றிரவு 8 மணியளவில், சீன ஊடக குழுமத்தின் 9 தொலைக்காட்சிச் சேனல்கள், 10 ஒலிபரப்பு அலைவரிசைகள் மற்றும் 6 புதிய ஊடக மேடைகளில் இந்த சிறப்புக் கலை நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். மேலும், சி.ஜி.டி.என் தொலைக்காட்சி நிறுவனம் 68 மொழிகளின் வழியாக, உலகின் 170க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 700க்கும் அதிகமான செய்தி ஊடகங்களை ஒன்றிணைத்து இக்கலை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.  

உலகளாவிய சீனர்கள் இந்த சிறந்த கலை நிகழ்ச்சியைக் கண்டுரசித்து புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்கவுள்ளனர்.