சீனா உலகப் பொருளாதார அதிகரிப்பின் உந்து சக்தி:உலக வர்த்தக அமைப்பு பொது இயக்குநர்
2023-01-22 17:36:49

உலகப் பொருளாதார மன்றத்தின் 2023ஆம் ஆண்டு கூட்டம் 20ஆம் நாள் வெள்ளிகிழமை டாவோஸில் நிறைவுற்றது. உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் இவேல சீன ஊடகக் குழுமத்துக்குப் அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் முன்னென்றும் கண்டிராத ஒத்துழைப்பு மேற்கொண்டால் தான், உலக வளர்ச்சியில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது நடப்பு ஆண்டு கூட்டத்தில் முழு உகுக்கும்  தெரிவிக்கப்பட்ட தகவல் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சீனா உள்நாட்டில் நுகர்வுத் தேவையின் அதிகரிப்பை முன்னேற்றுவதோடு, அதன் தயாரிப்புத் தொழில் துறை இயல்பான நிலைக்கு மீட்சி அடைந்து வருகின்றது. இது, உலகப் பொருளாதாரத்துக்கு நன்மை கொண்டு வரும் என்றார். உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான உந்து ஆற்றலாக, சீனா மீண்டும் திறப்பைச் செயல்படுத்துவது நல்லது என்றும் குறிப்பிட்டார்.