உலக பொது சுகாதார அறைகூவல்கள் இன்னும் உள்ளது
2023-01-22 17:13:28

உலகப் பொருளாதார மன்றத்தின் 2023ஆம் ஆண்டு கூட்டம் 20ஆம் நாள் ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நிறைவு பெற்றது. தொடக்க கட்டத்தை விட, தற்போது கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் கடும் நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் விகிதம் பெரிதும் குறைந்துள்ளது. ஆனால், உலகளாவிய பொது சுகாதார துறையில் தடுப்பூசிகளின் நியாயமற்ற பங்கீடு, போலியான தகவல்கள் பரவுவது போன்ற முக்கிய அறைகூவல்கள் இன்னும் நிலவி வருகின்றன என்று இவ்வாண்டு கூட்டத்தில் பங்கேற்ற பல நிபுணர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.