லாஸ் ஏஞ்சல்ஸிலில் கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம்
2023-01-23 16:25:24

அமெரிக்க கலிஃபோர்னிய மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மாண்டேரி பார்க் நகரில் 21ஆம் நாளிரவு நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்தனர். 10பேர் காமயடைந்தனர்.

மாண்டேரி பார்க் நகரிலுள்ள நடன அரங்கம் ஒன்றில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றதாகவும் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஏற்பட்ட இடத்துக்கு அருகில் பத்தாயிரக்கணக்கானோர் பங்கேற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து 22ஆம் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கடந்த சில பத்து ஆண்டுகளில் லாஸ் ஏஞ்சல்ஸில் நிகழ்ந்த மிக கடுமையான தூப்பாக்கி சூடு இது என்று அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்தது.