மங்கோலியாவில் கடும குளிர் தாக்கம்
2023-01-23 16:53:16

மங்கோலியாவின் சவ்கான் மாநிலத்தில் கடந்த 5ஆண்டுகளில் காணாத கடும் குளிரின் தாக்கம் 22ஆம் நாளிரவில் ஏற்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலையாக பூச்சியத்துக்கு கீழ் 50 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. தலைநகரான உலான்பாடரின் மையப் பகுதியில் பூச்சியத்துக்கு கீழ் 35 திகிரி செல்சியஸ் பதிவானது. தெற்கிலுள்ள புறநகரில் பூச்சியத்துக்கு கீழ் 41 திகிரி செல்சியஸ் எட்டியது.  

முன்னதாக 2018ஆம் ஆண்டு சவ்கான் உள்ளிட்ட இடங்களில் பூச்சியத்துக்கு கீழ் 50 முதல் பூச்சியத்துக்கு கீழ் 53 திகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியது.